Friday, January 10, 2014

Veeram Movie Review

 அஜித் நடிப்பில் இதுவரை பொங்கலுக்கு வெளியான தீனா’, ‘ரெட்’, ‘பரமசிவன்’, ‘ஆழ்வார்’ ஆகிய படங்களில் தீனா’ மட்டுமே மெகா ஹிட்! மற்ற எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதேபோல் விஜய்யுடன் நேரடியாக மோதிய படங்களான ஆஞ்சநேயாவும், ‘ஆழ்வாரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனாலேயே இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவுடன் வெளியாகும் வீரம்’ படத்தை தல ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அஜித் முதல்முறையாக நடித்துள்ள முழுநீள கிராமத்து படம் என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறது வீரம்’. ரசிகர்களின் இத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளதா இந்த வீரம்’. கடைசி வரியில் இதற்கான பதிலை பார்ப்போம்.

படத்தின் கதைப்படிஅஜித்துக்கு விதார்த்பாலாமுனீஸ்சுகைல் என நான்கு தம்பிகள். இவர்கள் ஊருக்குள் எப்போதும் அடிதடியோடு வீரமாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள். இதற்காகவே போலீஸ் கேஸ்களை கவனிக்க வக்கீல் சந்தானத்தை குடும்ப வக்கீலாக வைத்திருப்பவர்கள். தான் கல்யாணம் செய்துகொண்டால் தம்பிகளை பிரிந்து விடுவோம் என திருமணம் செய்யாமல் வாழ்கிறார் அஜித். ஆனால்தம்பிகள் மூன்று பேர்சந்தானம் என அனைவரும் காதலில் விழஎப்படியாவது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தால்தான் நமக்கும் திருமணம் நடக்கும் என தம்பிகள் திட்டம் போடுகிறார்கள். அதனால் தமன்னாவையும்அஜித்தையும் காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். அதோடு அடிதடிக்கு பேர் போன இவர்களுக்கு எதிரிகளாலும் சில பிரச்சனைகள் முளைக்கின்றன. கடைசியில் தமன்னாவுடன் அஜித் கைகோர்த்தாராஎதிரிகளை அஜித் என்ன செய்தார்என்பது மீதிக்கதை.

கிட்டத்தட்ட 54 படங்களில் அஜித் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் முழு படத்திலும் வெள்ளை மனிதராக (வெள்ளை உடைவெள்ளை மனம்வெள்ளை முடி) வலம் வருகிறார். இப்படி தோன்றவும் தனி தைரியம் வேண்டும். எந்த உடையும் தனக்கு பொருந்தும் என்பதற்கு இவர்தான் உதாரணம். சண்டைக்காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார். அபார உழைப்பு. ரயில் சண்டையில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். மற்ற படங்களில் மிச்சம் விட்ட காமெடிசென்டிமென்ட் போன்றவற்றை இந்த படத்தில் பிடித்துள்ளார்.

மூன்று வருடத்திற்குப் பிறகு தமிழில் நடிக்கும் தமன்னாஇந்தப் படத்தில் அழகுச்சிலையாக வலம் வருகிறார். அஜித்துக்கும்இவருக்கும் பொருத்தம் ஜோர். பாடல் காட்சிகளில் கவர்ச்சிகுளிர்ச்சி. மற்ற காட்சிகளில் குடும்பப்பாங்கு. நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை.

தம்பிகளாக விதார்த்துக்கும்பாலாவுக்கும் நிறைய வாய்ப்பு. மற்றபடி சுகைலும்முனிஷும் படம் முழுக்க வந்தாலும் நடிக்க வாய்ப்பு குறைவுதான்.

சந்தானம் கலகல காமெடி. என்றென்றும் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார். நாசர்பிரதீப் ராவத்அதுல் குல்கர்னிரமேஷ் கண்ணாஇளவரசு என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஓபனிங் பாடலும்தீம் மியூசிக்கும் ஆக்ஷன் படத்துக்கே உரித்தான சூட்டை கிளப்புகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம். ஆனால்ஒளிப்பதிவாளர் வெற்றி அதை படம் பிடித்த விதத்தில் பாடல்களை காப்பாற்றி இருக்கிறார். இருந்தாலும் பாடல்களில் தெலுங்கு வாடை அதிகம்.


சிறுத்தை’ என்ற ரீமேக் படத்தை இயக்கிய சிவாவுக்குஅந்த வெற்றியால் கிடைத்த படம்தான் வீரம்’. அஜித்தை கிராமத்து பாத்திரத்தில் எப்படி காட்டப் போகிறார் என்று நினைத்த அனைவரையும் சூப்பர்’ என்று சொல்ல வைத்து விட்டார். சரியான விதத்தில் காமெடிசென்டிமென்ட்ஆக்ஷன் என கலந்துசுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்துள்ளார். தல’ ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வீரம்’ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா அஜித்தின் உதவியுடன்!

0 comments:

Post a Comment